வங்கிகள், எண்ணெய்க் கப்பல்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள்
இந்த முன்மொழிவில் ரஷ்யாவைச் சேர்ந்த 60 வங்கிகளை சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து நீக்குவது அடங்குகிறது. ரஷ்யாவின் மறைமுகக் கப்பல் படை என அழைக்கப்படும் கப்பல் வலையமைப்பும் குறிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரஷ்யாவின் கிரிப்டோ பொருளாதாரச் சூழலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
ஐரோப்பிய நிறுவனங்கள் ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பை கட்டமைக்க, இயக்க அல்லது பழுதுபார்க்க உதவுவதற்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய முன்னாள் போராளிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கும் தடை முன்மொழியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய அணிகளும் விளையாட்டு வீரர்களும் பங்கேற்க முடியாத வகையிலும் EU 22nd sanctions package நடவடிக்கைகளை கொண்டுள்ளது. இந்தத் தடைகள் இன்னும் முன்மொழிவு நிலையில் உள்ளன.
இதனிடையே, ஐரோப்பாவை உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி வலியுறுத்தினார். எதிர்கால பாதுகாப்பு உறுதிகள் மற்றும் நேட்டோ உறுப்பினர் தொடர்பான கேள்விகளுக்கும் தெளிவான பதில் தேவை என அவர் கூறினார்.































