ஜெர்மனி – EU புதிய பயோமெட்ரிக் எல்லை முறை முழுமையாக அமலுக்கு வந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) அறிமுகப்படுத்திய புதிய Entry/Exit System (EES) எனப்படும் டிஜிட்டல் எல்லை கட்டுப்பாட்டு முறை 2026 ஏப்ரல் 10 முதல் 29 நாடுகளில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இந்த முறைமையின் மூலம் EU அல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட் ஸ்டாம்ப் முறையை நீக்கி அவர்களின் முகஅடையாளம் (facial scan), விரலடிப்படை (fingerprints) போன்ற பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
இந்த புதிய முறை குறுகிய கால (90 நாட்கள் வரை) பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் தகவல்களை துல்லியமாக பதிவு செய்து பாதுகாப்பை மேம்படுத்தவும் சட்டவிரோத தங்குதலை தடுப்பதற்கும் உதவுகிறது.
மேலும் ஜெர்மனி இந்த முறைமையை சிறப்பாக செயல்படுத்திய நாடாக கருதப்படுகிறது. விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் இந்த டிஜிட்டல் சோதனை முறைகள் சீராக செயல்பட்டு வருவதால் ஜெர்மனி மாதிரி நாடு என பாராட்டப்படுகிறது.
ஆனால் இந்த புதிய மாற்றம் ஆரம்ப காலத்தில் பயணிகளுக்கு கூடுதல் காத்திருப்பு நேரத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமுறை பதிவு செய்த பிறகு அடுத்த பயணங்களில் சுலபமான மற்றும் விரைவான சோதனை அனுபவத்தை பெற முடியும்.





Leave a Reply