குறிப்பாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் பரவி வருவதை கவனித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
போலி நிதி விளம்பரங்களை நம்ப வேண்டாம்
இந்தக் காணொளிகளில் மத்திய வங்கி ஆளுநர் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைப் பரிந்துரைப்பது போல தவறாகக் காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இடம்பெறும் நிதி ஆலோசனைகள், முதலீட்டு வாய்ப்புகள் அல்லது வேறு எந்தக் கோரிக்கைகளையும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க உதவும் வகையில், போலி காணொளிகளின் உதாரணங்களைக் கொண்ட விழிப்புணர்வு அறிவிப்பையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
நிதி தொடர்பான தகவல்களை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இத்தகைய fake AI-generated videos மற்றும் விளம்பரங்களைப் பகிராமல் இருப்பதன் மூலம் அவற்றின் பரவலைத் தடுக்குமாறும் சமூக ஊடகப் பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
































