விசா விண்ணப்பப் படிவங்களில் உள்ள புலங்களின் எண்ணிக்கையும் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது. புதிய நடைமுறையை செயல்படுத்த தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதிய விதிகளின் கீழ் விசாக்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் மருத்துவ விசாக்களில் மாற்றங்கள்
Tourist Visa, Visitor Visa எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. V-1 விசா 30 நாட்களுக்கு பலமுறை நுழையும் அனுமதியுடன் வழங்கப்படும். சுற்றுலாவுடன் குறுகியகால வணிகச் சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், நலவாழ்வு சிகிச்சைகள், குறுகியகால மருத்துவ சிகிச்சை, யோகா மற்றும் மொழி, இசை, கலைப் பயிற்சிகளும் இதில் அடங்கும். V-2 விசா ஒன்று, ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படலாம்; மலையேற்றமும் இதில் அடங்கும்.
மருத்துவ விசாக்களில் M-1 வழக்கமான சிகிச்சைக்கும், M-3 AYUSH சிகிச்சைக்கும் வழங்கப்படும். இரண்டும் இயல்பாக ஒரு ஆண்டு பல்நுழைவு அனுமதியைக் கொண்டிருக்கும். உடன் வருபவர்களுக்கு M-2 மற்றும் M-4 விசாக்கள் வழங்கப்படும்.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பிரிவுகள்
மாணவர் விசா S-1, S-2 என இரு பிரிவுகளாகவும், வணிக விசா B-1, B-2 எனவும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. Study in India வழியாக சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு e-S1 விசா அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது படிப்பு காலம் வரை வழங்கப்படலாம். இந்தியாவின் e-விசா வசதி தற்போது 172 நாடுகளின் குடிமக்களுக்கு கிடைக்கிறது. இந்த India visa rule changes, வெளிநாட்டு மாணவர்கள், நோயாளிகள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வரும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான நடைமுறையை தெளிவுபடுத்தும் என அரசு தெரிவித்துள்ளது.































