2026 ஆம் ஆண்டில் 6 முதல் 10 வயது குழந்தைக்கு €426.87, 11 முதல் 14 வயது குழந்தைக்கு €450.41, 15 முதல் 18 வயது குழந்தைக்கு €466.02 வழங்கப்படும். 6 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்காக தகுதியுள்ள CAF பயனாளிகள் எந்த விண்ணப்பமும் செய்ய வேண்டியதில்லை CAF தகுதியை சரிபார்த்து உதவித்தொகையை தானாகவே வங்கிக் கணக்கில் செலுத்தும்.
ஆனால் 16 முதல் 18 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் குழந்தை தொடர்ந்து கல்வி அல்லது பயிற்சியில் இருப்பதை CAF இணையதளத்தில் உறுதிப்படுத்த வேண்டும். CAF-இல் பதிவு செய்யப்படாதவர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
Allocation de rentrée scolaire (ARS)
இந்த பிரான்ஸ் ARS 2026 உதவித்தொகை குடும்பத்தின் 2024 வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதுடன் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழக்கமாக ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரே தவணையாக பணம் வழங்கப்படும்.




























