ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதால், புதிய prix repère குறியீட்டு விலையும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கணக்கீட்டின் அடிப்படையில் எரிவாயு குறியீட்டு விலை 160.54 யூரோ/MWh இலிருந்து 152.86 யூரோ/MWh ஆக குறைகிறது.
இதன் மூலம் குறியீட்டு விலையுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்தம் வைத்திருக்கும் குடும்பங்களின் ஜூன் மாத மின்சார/எரிவாயு கட்டணத்தில் சராசரியாக 1.26 யூரோ வரை குறைவு கிடைக்கும் என பிரான்ஸ் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் (CRE) தெரிவித்துள்ளது. நிரந்தர (fixed price) ஒப்பந்தம் வைத்திருப்பவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது.
2023 ஜூன் மாதத்தில் பிரான்சின் கட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விலை முறை நிறுத்தப்பட்டதையடுத்து மாதந்தோறும் CRE இந்த prix repère விலையை வெளியிட்டு வருகிறது. இது தற்போது மக்களுக்கு பல்வேறு எரிவாயு ஒப்பந்தங்களை ஒப்பிட உதவும் ஒரு வழிகாட்டி விலையாக செயல்படுகிறது.



























