பிரான்சில் ஆவணமில்லா குடியேற்றத்தாரர்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் குடியேற்றம் நாட்டின் பாதுகாப்பு குறைவிற்கு முக்கிய காரணம் என பெரும்பாலான பிரான்சு மக்கள் நம்புகின்றனர் என்று CSA நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
நவம்பர் 7 முதல் 10 வரை ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற 1,011 பேரில் 56% பேர் குடியேற்றம் பாதுகாப்பின்மைக்குப் “முக்கிய பங்கு” வகிக்கிறது எனவும், 19% பேர் “சிறிய பங்கு” எனவும், 13% பேர் எந்த பங்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், 11% பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
வயதின்படி பார்க்கும்போது 35 வயதிற்குக் குறைந்தவர்களில் 49% பேர் மட்டுமே குடியேற்றத்தை முக்கிய காரணம் எனக் கூறியுள்ள நிலையில் 50 முதல் 64 வயதுக்குள் உள்ளவர்களில் இந்த எண்ணிக்கை 65% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஆண்களில் 59% பேர் இதை முக்கிய காரணமாகக் கருதுகின்றனர் இது பெண்களை விட 5% அதிகம்.
சமூக மற்றும் தொழில்வகை அடிப்படையில் உயர்நிலை தொழில்வகை (CSP+) மற்றும் சாதாரண தொழில்வகை (CSP-) இரண்டிலும் 57% பேர் குடியேற்றம் பாதுகாப்பின்மைக்கு காரணம் என நம்புகின்றனர்.
அரசியல் ரீதியாக, இடதுசாரி கட்சிகள் குடியேற்றத்தின் தாக்கத்தை குறைவாகக் கூறியுள்ளன La France Insoumise (24%) மற்றும் Socialist Party (25%) குறைவாகக் கூறியுள்ள நிலையில், வலதுசாரி கட்சிகளில் இது பெரும்பான்மையாக உள்ளது. Republicans கட்சியினரின் 85% பேரும் National Rally ஆதரவாளர்களின் 84% பேரும் குடியேற்றம் பாதுகாப்பு குறைவிற்கு முக்கிய காரணம் என நம்புகின்றனர். அதேசமயம், அதிபர் கட்சி Renaissance-இல் இது 42% ஆகும்.





Leave a Reply