பிரான்ஸ் சம்பள விடுமுறை பயன்படுத்தாத விடுமுறை நாட்கள் மீண்டும் கிடையாது
பிரான்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை (congés payés) தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் தனது சம்பள விடுமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தாமல் விட்டால் அவை பொதுவாக இழக்கப்படுகின்றன.
பிரான்ஸ் சம்பள விடுமுறை பெரும்பாலும் இந்த விடுமுறைகள் ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை உள்ள காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். அந்த காலக்கெடு முடிந்த பின் பயன்படுத்தாத நாட்கள் தானாகவே அடுத்த ஆண்டுக்கு மாற்றப்படாது.
ஆனால் சில விசேஷ சூழ்நிலைகளில் மட்டும் மாற்றம் (report) செய்ய அனுமதி கிடைக்கலாம். உதாரணமாக ஊழியர் உடல்நலக்குறைவு அல்லது தத்தெடுப்பு விடுப்பு காரணமாக விடுமுறைகளை எடுக்க முடியாதிருந்தால் அந்த நாட்களை பின்னர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
மேலும் ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் சம்மதித்தால் மட்டுமே விடுமுறைகளை மாற்றுவது சாத்தியம் இல்லையெனில் நிறுவனம் அதை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இதனால் அனைத்து ஊழியர்களும் தங்களது விடுமுறை நாட்களை காலவரையறைக்குள் திட்டமிட்டு பயன்படுத்துவது மிக முக்கியமானது. இல்லையெனில் பயன்படுத்தாத விடுமுறை நாட்கள் முழுமையாக இழக்கப்பட வாய்ப்பு அதிகம்.





Leave a Reply