பிரான்சின் புதிய பாரிஸ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Emmanuel Grégoire பாரிஸ் நகரின் தெருக்களில் உருவாகி வரும் அகதி முகாம்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக Gare du Nord ரயில் நிலையம் அருகிலுள்ள மெட்ரோ பாதையின் கீழ் அமைந்துள்ள முகாமில் தற்போது சுமார் 800க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முகாம்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில் புதிய தங்குமிட மையங்களை அமைத்து அகதிகளை தெருக்களில் இருந்து மாற்ற முயற்சி செய்யப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிலர் இந்த முயற்சியை ஆதரித்தாலும் மற்றவர்கள் இது நீண்டகால தீர்வாக அமையுமா என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளனர்.
































