த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ள காந்திராஜ், ‘ஆய்வு’ என்ற பெயரில் காவல் நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது. கைகளை பின்னால் கட்டியபடி அவர் உள்ளே நுழையும் காட்சிகளுடன், ‘கருப்பு’ திரைப்படத்தின் பாடல் வரிகள் பின்னணி இசையாக இடம்பெற்றுள்ளன.
காவல் நிலைய வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்
சீருடையில் பணியில் இருந்த காவலர்களை அழைத்துப் பேசும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதில், “இன்ஸ்பெக்டர் யாருமே இல்ல. இயர் எண்டு வருது” என்று காந்திராஜ் பேசும் காட்சியும், காவல் நிலையத்துக்குள் அவர் நடமாடும் காட்சிகளும் உள்ளன.
இந்த ரீல்ஸ் வீடியோ த.வெ.க-வின் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் காந்திராஜின் இன்ஸ்டாகிராம் பக்கம் கொலாபரேட்டராக இணைக்கப்பட்டிருந்தது.
ஒருநாளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் கருத்துப் பகுதியில் கடும் விமர்சனங்களை பதிவு செய்த நிலையில், பின்னர் அந்தக் கருத்துப் பகுதி முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Gandhi Raj police station reel குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகியதாக தகவல் இல்லை.

































