பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த வழக்கில், நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகியோர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் நிஷாந்த் பைக், வாடகைக் கார், பேருந்து என மாறி மாறி பயணம் செய்து தப்பித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலால் கைது
பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்தபோது, அவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த ஓட்டுநர் அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் பேருந்தை நிறுத்திய போலீசார், நிஷாந்தை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்றதாகவும், காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. Nishanth arrested in Dharmapuri நிலையில், மதுரையிலிருந்து தனிப்படை காவல்துறையினர் தர்மபுரிக்கு விரைந்துள்ளனர். நிஷாந்திடம் நடைபெறும் விசாரணையில், மீதமுள்ள தங்க நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, கொள்ளை எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































