இம்முறை உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர். இதேவேளை கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சார்த்திகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




























