வசுந்தரா பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சுஷில் குமாருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், மீண்டும் பாதிக்கப்பட்டார். இதேபோன்ற அறிகுறிகள் அவரது மகன் மற்றும் மருமகனுக்கும் ஏற்பட்டன.
இரத்தப் பரிசோதனையில் ஈயம் இருப்பது கண்டுபிடிப்பு
மருத்துவப் பரிசோதனையில் சுஷிலின் உடலில் ஆபத்தான அளவு ஈயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. சுஷிலின் 12 வயது மகள், தாய் உணவின் ஒரு பகுதியைத் தனியாக எடுத்துவைத்த பின்னர் மீதமுள்ள உணவில் ஏதோ ஒன்றைத் தெளித்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்திராபுரம் காவல் நிலையத்தில் சுஷில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பின்னர் டெல்லி விவேக் விஹாரில் உள்ள தாய் வீட்டில் இருந்த ரேணுவை போலீஸார் கைது செய்தனர். Ghaziabad poisoning case விசாரணையில், சுஷிலின் ரூ.6 கோடி மதிப்பிலான டிராவல் ஏஜென்சியையும், ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையையும் பெறும் நோக்கில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸ் அதிகாரி அபய் ராஜேந்திர தாகா தெரிவித்தார். இந்தச் சதியில் ரேணுவின் தாய், சகோதரர் மற்றும் மைத்துனருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெறுகிறது.





























