இதன் மூலம் ஆண்டு முழுவதும் வருகை தந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 18,78,557 ஆக உயர்ந்துள்ளது. மாத இறுதி வரை மேலும் சில நாட்கள் உள்ள நிலையில், இவ்வாண்டின் மொத்த வருகைகள் 1.9 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது மீட்பு பாதையில் உள்ளது. முக்கிய சுற்றுலா நாடுகளாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இதேவேளை, அரசு சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்த புதிய சட்ட திருத்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் சுற்றுலா நிர்வாக அமைப்புகளை ஒருங்கிணைத்து, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விளம்பர நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருட இறுதிக்குள் ஸ்ரீலங்கா மொத்தம் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என நம்பப்படுகிறது.


































