இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் பல ஆண்டுகளாக கடும் போட்டியுடன் மோதிக்கொண்டிருக்கின்றன. மூன்று முக்கிய வடிவங்களில் (Test, ODI, T20) நடைபெற்ற போட்டிகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இந்தியா சிறிய முன்னிலை பெற்றிருப்பது தெரிய வருகிறது.

Test போட்டிகளில் இரண்டு அணிகளும் மொத்தம் சுமார் 65 முறை சந்தித்துள்ள நிலையில், இந்தியா 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மற்ற போட்டிகள் டிராவாக முடிந்துள்ளன.

ODI கிரிக்கெட்டில் இந்த இரு அணிகள் 120 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் நியூசிலாந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் சில போட்டிகள் முடிவின்றி அல்லது டையாக முடிந்துள்ளன.T20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து சுமார் 30 முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 18 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், நியூசிலாந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது; சில போட்டிகள் டையாக முடிந்துள்ளன.

ஆனால் T20 உலகக் கோப்பை வரலாற்றைப் பார்த்தால் நிலைமை மாறுபடுகிறது. அந்த போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மொத்தம் 3 முறை மோதியுள்ள நிலையில், அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பொதுவாக நடைபெறும் இருதரப்பு போட்டிகளில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும், உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் நியூசிலாந்து பலமுறை இந்தியாவுக்கு சவாலாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading