கிராபிக்ஸ் மற்றும் கதாபாத்திரங்களுக்கு பாராட்டு
விமர்சகர்கள், இது நீண்ட காத்திருப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ambitious மற்றும் புதுமையான open-world action game எனத் தெரிவித்துள்ளனர். கிராபிக்ஸ், கதை சொல்லும் முறை, உலக வடிவமைப்பு ஆகியவை குறிப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன.
மியாமியைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள லியோனிடா பகுதி மிகவும் யதார்த்தமாகத் தெரிகிறது என விமர்சனங்கள் கூறுகின்றன. முக்கிய கதாபாத்திரங்களான ஜேசன் மற்றும் லூசியாவின் உறவும், அவர்கள் உண்மையான மனிதர்களைப் போலத் தோன்றுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அதேவேளை, விளையாட்டின் அதிகமான யதார்த்தம் முந்தைய பாகங்களில் இருந்த கட்டுப்பாடற்ற நகைச்சுவைத் தன்மையை குறைக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் இருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும், GTA 6 reviews ஒட்டுமொத்தமாக விளையாட்டை மிக உயர்ந்த தரத்தில் மதிப்பிட்டுள்ளன.
எட்டு விருதுகளுக்குப் பரிந்துரை
ராக்ஸ்டார் நிறுவனம் விளையாட்டின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. அதன் தயாரிப்பு செலவு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியிருக்கலாம் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வெளியீட்டுக்கு முன்பே, 2026ஆம் ஆண்டுக்கான கேம் விருதுகளில் ‘GTA 6’ எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆண்டின் சிறந்த விளையாட்டு மற்றும் சிறந்த இசை ஆகிய பிரிவுகளும் இதில் அடங்கும்.
லூசியா கதாபாத்திரத்தில் நடித்தவர் மானி எல். பெரெஸ் எனப் பரவலாக நிலவிய ஊகத்தையும் பரிந்துரை உறுதிப்படுத்தியுள்ளது. இதை ராக்ஸ்டார் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

































