Innovator Founder வழியில் குறைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம்
இந்த வழியின் கீழ் குடியேறும் நிறுவனர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியேற்றத்துக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில், பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் ஒரு சிறிய சுயாதீன காபி கடையின் வருவாயை ஒத்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. பொதுவாக ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் நிறுவனர்களாகவே உள்ளனர். இதனால் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று குழு மதிப்பிட்டுள்ளது.
சில விசா பெற்றவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பெரும்பாலானோரின் மோசமான முடிவுகளை அது சமநிலைப்படுத்தவில்லை. நீண்ட காலத்தில் இந்த வழி அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. Innovator Founder route தொடர வேண்டுமெனில், நிரந்தர குடியேற்றத்துக்கான தகுதி காலத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும், கடுமையான செயல்திறன் அளவுகோல்கள் தேவை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Global Talent வழிக்கு சிறிய மாற்றங்கள்
இதற்கு மாறாக, Global Talent வழி பொதுவாக சிறப்பாக செயல்படுவதாக குழு தெரிவித்துள்ளது. இதில் 60 சதவீத பிரதான விண்ணப்பதாரர்கள் உயர்கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள்; தொழில்நுட்பத் துறை 15 சதவீதமாக உள்ளது. 2022/23ல் விசா பெற்றவர்களில் 8 முதல் 21 சதவீதம் பேர் இரண்டாவது ஆண்டில் முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச வருமான வரம்பான £12,571க்கு குறைவாக சம்பாதித்துள்ளனர்.
இரு வழிகளுக்குமான வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், தனி முதலீட்டாளர் விசாவை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
































