மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இரான் தொடர்பான போர் சூழ்நிலையில் அமெரிக்க இராணுவ மற்றும் அரச விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு வந்த பல கோரிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து அரசு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.
சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையின் படி மூன்று கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பராமரிப்பு (maintenance) விமானப் பயணம் மற்றும் இரண்டு போக்குவரத்து விமானப் பயணங்கள் ஆகும்.
ஆனால் மேலும் வந்த இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் நடுநிலை சட்டத்தின் படி எந்தப் போர் அல்லது ஆயுத மோதலிலும் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு அந்தப் போருடன் தொடர்புடைய இராணுவ நடவடிக்கைகளுக்காக தங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது.
எனினும் மனிதாபிமான உதவி மருத்துவப் போக்குவரத்து, காயமடைந்தவர்களை மாற்றுதல் போன்ற மனிதநேய காரணங்களுக்கான விமானப் பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அரசு விளக்கியுள்ளது.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
மத்திய கிழக்கு மோதல் நேரத்தில் போருடன் நேரடி தொடர்பு இல்லாததாக தெளிவாக நிரூபிக்கப்படும் எதிர்கால கோரிக்கைகள் அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் விமானப் பயணங்கள் கோரப்பட்டு அவற்றின் நோக்கம் தெளிவாக தெரியவில்லை என்றால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அரச விமானங்களுக்கு பொதுவான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த அனுமதி அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போரில் இராணுவ ஆதரவாக கருதப்படும் எந்தப் பயணங்களுக்கும் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இல்லாத விமானங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அனுமதி பெற வேண்டும், இதை சுவிட்சர்லாந்தின் Federal Office of Civil Aviation (FOCA) பரிசீலிக்கும்.2026 பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கில் கடுமையான மோதல்கள் நடந்து வருவதாக சுவிட்சர்லாந்து கூட்டாட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒரு பக்கம் இரான் மறுபக்கம் என மத்திய கிழக்கு மோதல் நிலை தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து தனது நடுநிலை கொள்கையை கடைப்பிடித்து அனைத்து விண்ணப்பங்களையும் கவனமாக பரிசீலித்து முடிவெடுக்கிறது.

































