இதனிடையே தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கும் வகையில் பசன் அமரசேன உறுப்பினர்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதேவேளை தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிச் சேவை சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி சங்கத்தின் விசேட பொதுச் சபைக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என செயலாளர் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



























