ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை சங்கீத நகர் பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் மதுவின் மகன் அபிராம், அங்குள்ள என்.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர் அழைப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது.
புதரில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட உடல்
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் போலீசார் செல்போன் சிக்னல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தனர். அப்போது இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் வந்த அழைப்பைத் தொடர்ந்தே அபிராம் சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், அபிராமை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து கீழே தள்ளி காலால் மிதித்துத் தாக்கிக் கொலை செய்ததாகவும், உடலை சணல் சாக்கில் கட்டி பாங்கப்பாறை பேரூர் சந்திப்பு அருகிலுள்ள புதரில் வீசியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். அவர்களது தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டனர்.
இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுமியுடன் நெருக்கமாகப் பழகிய அபிராமின் நண்பரை முதலில் குறிவைத்ததாகவும், அவர் வராததால் அபிராமை வரவழைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனர் அருள் பி. கிருஷ்ணா கூறினார். இந்த Kerala Instagram murder தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






























