அவர் சிறிய விளம்பர நிறுவனம் நடத்தி வந்த டேரியுஸ் யானிஷெவ்ஸ்கி என அடையாளம் காணப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பட்டினி போடப்பட்ட பின்னர் அவர் ஆற்றில் வீசப்பட்டிருந்தார். தடயங்கள் கிடைக்காததால், இந்த வழக்கு 2001-ல் தீர்க்கப்படாத வழக்காக முடக்கப்பட்டது.
செல்போன் தடயம் முதல் ‘அமோக்’ நாவல் வரை
2003-ல் பழைய வழக்குகளை மறுஆய்வு செய்த ஆய்வாளர் ஜாசெக் ஸ்லெப்சோவ்ஸ்கி, யானிஷெவ்ஸ்கியின் மாயமான செல்போனைத் தேடினார். அந்த செல்போன், சம்பவத்துக்குப் பிறகு Allegro இணைய ஏலத் தளத்தில் விற்கப்பட்டதும், அதை விற்ற கணக்கு கிறிஸ்டியன் பாலாவுடையது என்பதும் தெரியவந்தது.
அதே காலத்தில் பாலா எழுதிய ‘அமோக்’ என்ற நாவலில், முன்னாள் காதலியுடன் தொடர்பு வைத்ததாக சந்தேகிக்கும் ஒரு தொழிலதிபரை கடத்தி, சித்திரவதை செய்து ஆற்றில் வீசிக் கொல்லும் கதை இடம்பெற்றிருந்தது. கொலை நடந்த விதம், காயங்களின் விவரங்கள், ஆடை உள்ளிட்ட தகவல்கள், பொதுவெளியில் வெளியிடப்படாத வழக்கு விவரங்களுடன் ஒத்திருந்தன.
பாலா 2005-ல் கைது செய்யப்பட்டார். செல்போன் விற்பனை, கயிறுகள் மற்றும் உபகரணங்கள் வாங்கிய ரசீதுகள், வழக்கு தொடர்பான இணையத் தேடல்களின் ஐபி ஆதாரங்கள் ஆகியவை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. 2007-ல் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; மேல்முறையீட்டுக்குப் பிறகு 2008-ல் அதே தண்டனை உறுதி செய்யப்பட்டது. Krystian Bala murder case, அகங்காரம் குற்றவாளிக்கே எதிரான தடயமாக மாறிய வழக்காகப் பதிவாகியுள்ளது.































