பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கும் நீதித்துறைக்கும் எதிரான சவாலாக பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் மத அடிப்படையில் சட்டத்தை திசைதிருப்பும் முயற்சிகள் ஏற்க முடியாதவை என்றும் சிறுமிக்கு நீதி கிடைப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது – யாழில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மதத்தின் பெயரில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.































