மாவட்ட மட்டத்தில் மக்களின் சுகாதார தேவைகளை கண்டறிதல் பொதுமக்கள் பங்கேற்புடன் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல் தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைத்தல் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் வளங்களை திறமையாக பயன்படுத்துதல் மற்றும் பிராந்திய சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் முன்னுரிமைத் திட்டங்களை அடையாளம் கண்டு அமைச்சிற்கு பரிந்துரைத்தல் மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணித்தல் போன்ற பணிகளும் இவர்களின் பொறுப்புகளில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு டாக்டர் நஜித் இந்திக யாழ்ப்பாணத்திற்கு டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா குருநாகலுக்கு டாக்டர் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பல எம்.பிக்கள் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




























