அந்நேரத்தில் கிடைத்த சிறிதளவு அரிசியை பயன்படுத்தி கஞ்சி தயாரித்து தங்களின் பசியை அடக்கிய சம்பவம் தமிழர்களின் மனதில் அழியாத நினைவாக உள்ளது. இறுதிக்கட்ட போரில் சிக்கியிருந்த மக்களின் உயிரை காத்த அந்த எளிய உணவான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ இன்று ஒரு நினைவு சின்னமாக மாறியுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதியை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இந்த கஞ்சி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அரிசி, தேங்காய் பால், உப்பு உள்ளிட்ட எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஞ்சி போரின் வேதனைகளையும் உயிரிழந்தோரின் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு உணர்வுபூர்வமான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
































