மும்பை காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60), தமது குடும்பத்திடம் பங்குச்சந்தை முதலீடு மூலம் ரூ.10.81 கோடி மோசடி செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். விசாரணையில், ‘இன்வெஸ்டாக்’ என்ற வர்த்தக செயலியை உருவாக்குவதாகக் கூறி, 2020ஆம் ஆண்டு ஷாவின் சாப்ட்வேர் இன்ஜினியர் மகனுடன் ரோஷன் நட்பை ஏற்படுத்தியதாகத் தெரியவந்தது.
மாறுவேடத்தில் நுழைந்த போலீஸார்
முதலீட்டாளர்களை நம்ப வைக்க போலியான அதிக லாப அறிக்கைகளைக் காட்டிய ரோஷன், கடந்த டிசம்பரில் லாபம் எனக் கூறி ஷா குடும்பத்துக்கு ரூ.3.8 கோடி வழங்கியதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் அவர் காணாமல் போனார். தொழில்நுட்பக் கண்காணிப்பில் குஜராத் மாநிலம் வல்சாட்டில் இருப்பது தெரியவந்தது.
அங்குள்ள குடியிருப்பை கண்காணித்த போலீஸார், துப்புரவுத் தொழிலாளர்கள் போல மாறுவேடமிட்டு உள்ளே நுழைந்தனர். மூன்று நாட்கள் அதே வேடத்தில் பணியாற்றிய பின்னர் ரோஷனை கைது செய்தனர். அவர் இளமையில் ஜெயேஷ் ஹஸ்முக்பாய் ஷா, டெல்லியில் ராகுல் அதுல்பாய் பரேக், மும்பையில் ரோஷன் பூஷன் சேத் என்ற பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Mumbai stock market fraud விசாரணையில், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், மஹிந்திரா தார் கார்கள், 14 ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் மூன்று குடியிருப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விக் ஏற்பாடு செய்த சலூன் ஊழியர்கள் உள்ளிட்ட 37 சாட்சிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
































