இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாலைத்தீவில் நடைபெறும் 21ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று (12) மாலைத்தீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே 11ஆம் திகதி தொடங்கிய இந்த முக்கிய மாநாடு மே 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசிய பிராந்தியத்தின் ஊடகம், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தகவல் பரிமாற்ற துறைகளின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடும் முக்கிய மேடையாக இந்த மாநாடு கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்கை அமைப்பாளர்கள், ஊடக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு ஊடக சவால்கள், தவறான தகவல் பரவல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொறுப்பான செய்தியறிக்கைகள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BIMSTEC மற்றும் SAARC அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிராந்திய தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.





Leave a Reply