பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்வதற்கும் இந்த திட்டம் முக்கியத்துவம் வழங்குகிறது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவை இணைந்து இந்த வழிகாட்டியை உருவாக்கியுள்ளன.
இதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவ ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் பாடசாலைகள் மற்றும் பிரிவேனா கல்வி நிறுவனங்களுக்கான டெங்கு தடுப்பு வழிகாட்டிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர் விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் டெங்கு பரவல் குழுக்களாக ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார். டெங்கு கட்டுப்பாடு என்பது பல்கலைக்கழகங்களால் மட்டும் தனியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல என தெரிவித்த பிரதி அமைச்சர் சமூகத்தின் ஒத்துழைப்பும் சுகாதார அதிகாரிகளின் ஆதரவும் அவசியம் என வலியுறுத்தினார்.Sri Lanka News
கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக இந்த வழிகாட்டி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவை வழங்கும் என தெரிவித்தார்.மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் டெங்கு அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் விசேட முறைமை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



























