அவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து தனது கல்வியைத் தொடர்ந்து வந்ததுடன் சட்டத்தரணி ஒருவரின் அலுவலகத்தில் சட்டப் பணிகளுக்கும் உதவி செய்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக நீதவான் விசாரணை உடற்கூறு பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































