சந்திப்பின் போது அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மீது இரு நாடுகளும் கடும் விமர்சனம் வெளியிட்டன. குறிப்பாக அமெரிக்காவின் அணு மற்றும் ஏவுகணை பாதுகாப்புத் திட்டங்கள் உலக நிலைத்தன்மைக்கு ஆபத்தாக உள்ளதாக சீனாவும் ரஷ்யாவும் கூட்டாகக் குற்றம்சாட்டின. உலக அரசியலில் “அமெரிக்க ஆதிக்கத்திற்கு மாற்றாக புதிய சக்தி சமநிலை” உருவாக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.
ஆனால் வெளிப்படையான நட்பின் பின்னணியில் சில முரண்பாடுகளும் தென்பட்டன. ரஷ்யா தீவிரமாக முன்னெடுத்து வரும் “பவர் ஆஃப் சைபீரியா2” எரிவாயுக் குழாய் திட்டத்தில் சீனா இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை. ஐரோப்பிய சந்தை இழப்பை ஈடுசெய்ய இந்த திட்டம் ரஷ்யாவுக்கு மிக முக்கியமானதாக இருந்தாலும் விலை மற்றும் நீண்டகால எரிசக்தி சார்பு தொடர்பான கவலைகள் காரணமாக சீனா எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.
அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதன்படி ரஷ்யா-சீனா உறவு முழுமையான உணர்ச்சி சார்ந்த நட்பல்ல அது பரஸ்பர நலன் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் கூட்டாண்மையாகும். உக்ரைன் போருக்குப் பின் மேற்கு நாடுகளின் தடைகளால் ரஷ்யா சீனாவை அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலையில் இந்த உறவில் தற்போது சீனாவே மேலாதிக்கம் செலுத்தும் பங்கில் இருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.




























