உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஏழு கடல் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டில்தான் சேவையில் சேர்க்கப்பட்ட இந்தக் கப்பல், ரஷ்யக் கடற்படையின் புதிய கப்பல்களில் ஒன்றாகும்.
தாக்குதலில் ஹெலிகாப்டரும் சரக்குக் கப்பலும் பாதிப்பு
கொர்வெட்டுடன் ரஷ்யாவின் Ka-27 ரக போர் ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா ஆயுதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் ‘MV Angara’ சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கைக்கோள் படங்களில் கப்பல் கடலில் மூழ்கியதும், அதன் முன்பகுதி மட்டும் நீருக்கு மேலே தெரிந்ததும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கப்பலின் மேல்பகுதியில் இருந்து புகை எழுந்ததாகவும், துறைமுகத் தளத்தில் பல்வேறு சிதைவுகள் கிடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லிபிய அதிகாரிகளின் தகவல்படி, ரஷ்யாவை நோக்கிச் சென்ற அந்தக் கப்பல் எரிபொருள் மற்றும் தேவையான பொருட்களைப் பெறுவதற்காக அங்கு இடைநிறுத்தம் செய்திருந்தது.
இந்தச் சம்பவம் லிபியாவின் இறையாண்மையை மீறியதாக அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா–உக்ரைன் போரிலும் வேறு எந்த வெளிநாட்டு போரிலும் லிபியா தரப்பல்ல என்றும் அரசு கூறியுள்ளது. Russian warship Merkuri தொடர்பான தகவல், இரு நாடுகளுக்கிடையேயான மோதல் லிபியக் கடற்பரப்பைச் சுற்றியுள்ள பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.




























