மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அசமகா பகுதியிலிருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த லொறி திடீரென செயலிழந்து நின்றதாக நைஜரின் அகாடெஸ் பிராந்திய ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது லொறியில் இருந்த இரு ஆண்கள் உயிர் பிழைப்பதற்காக 50 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நடந்து சென்று ஒரு நீர்நிலையை அடைந்ததுடன் பின்னர் அசமகா பகுதிக்குச் சென்று அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இசாவின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த லொறி நைஜர் எல்லையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலியின் தல்ஹான்டெக் நகரத்திலிருந்து பல நாட்களாகப் பயணித்துவந்தது தெரியவந்துள்ளது. எனினும் லொறி செயலிழந்ததற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.




























