இலங்கை தேர்தல்கள் ஆணையத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கே இன்று (11) தனது பதவியிலிருந்தும் அரசுப் பணியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 34 ஆண்டுகளாக அரசுப் பணியில் சேவை செய்து வந்ததாகவும், அந்தப் பணிக்காலம் இன்று நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் திகதி, சமன் ஸ்ரீ ரத்நாயக்கே அவர்கள் தேர்தல்கள் ஆணையத்தின் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது அறிக்கையில், முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலும் ஊடகப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்தார்.





Leave a Reply