நாட்டில் நிலவும் மோசமான காலநிலையும், பல பகுதிகளில் உருவான அனர்த்த நிலையும் காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) நடத்தப்பட இருந்த 2025 க.பொ.த உயர்தர (A/L) பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியானகே அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வழியே வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஊடக நிறுவனங்கள் அனைவரும் இந்த தகவலை பரீட்சார்த்திகளுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்ததாவது,
- நாடு முழுவதும் பல இடங்களில் ஏற்பட்ட பெருகிய மழை, பலத்த காற்று, வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக,
- பரீட்சார்த்திகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நாட்கள் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிவிக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
அதேவேளை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகள் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





Leave a Reply