சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இத்தாலி அரசு – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு 2026–2028.

இத்தாலி அரசு தனது “Decreto Flussi” என்ற குடியேற்ற திட்டத்தின் கீழ் 2026 முதல் 2028 வரை சுமார் 5 இலட்சம் (497,550) வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை விசா வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நாட்டில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும் விவசாயம், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளை நிரப்பவும் உருவாக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இந்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனி அளவுகளில் வேலை விசாக்கள் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டில் 164,850, 2027 இல் 165,850 மற்றும் 2028 இல் 166,850 விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாக்களில் பெரும்பாலானவை சீசனல் (Seasonal) வேலைகளுக்காக குறிப்பாக விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளுக்கு வழங்கப்படுகின்றன மற்றவை நிரந்தர (non-seasonal) வேலைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது நேரடியாக தொழிலாளர்களால் செய்ய முடியாது இத்தாலிய நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு வழங்குநர்கள் தான் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் குறிப்பிட்ட “click day” நாட்களில் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன மற்றும் அதிக போட்டி இருப்பதால் சில மணி நேரங்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் இத்தாலி அரசு சட்டப்படி வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வந்து சட்டவிரோத குடியேற்றத்தை குறைக்கவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வயதான மக்கள்தொகை மற்றும் உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையை இத்தாலி அதிகமாக நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்