லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு, ரயில்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட Nike காலணிகள், Milwaukee மின்சாரக் கருவிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகோ ரிவேரா, புல்லர்டன் உள்ளிட்ட ரயில் வழித்தடங்களில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ரயில்களை நிறுத்தி சரக்குகளை கள்ளச்சந்தையில் விற்பனை
கும்பலைச் சேர்ந்தவர்கள் லாரிகள் மற்றும் வேன்களில் ரயில் பாதைப் பகுதிகளுக்குச் சென்று, ஓடும் ரயில்களில் ஏறியதாக கூறப்படுகிறது. அவர்கள் காற்றுக் குழாய்களைத் துண்டித்து ரயில்களை அவசரமாக நிறுத்தச் செய்து, சரக்குகளை வாகனங்களில் ஏற்றி ரகசியக் கிடங்குகளில் பதுக்கியதாகவும், பின்னர் கள்ளச்சந்தையில் விற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கொள்ளையடித்த பொருட்கள் தொடர்பான தகவல்களை குழு உரையாடல்களில் பகிர்ந்ததுடன், சம்பவங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பரிமாறிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. Southern California train robbery வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதித்திட்டத்துக்கு 5 ஆண்டுகள், ஒவ்வொரு திருட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். ரயில் போக்குவரத்துக்கு எதிரான வன்முறைப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் லாஸ் ஏஞ்சல்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் எனக் கருதப்படுவர்.





























