குற்றப்பத்திரிகையின்படி, 2024 பிப்ரவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்களில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்ற ரயில்கள் குறிவைக்கப்பட்டன. நைக் காலணிகள், மில்வாக்கி மின்சாரக் கருவிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரயில்களை நிறுத்தி சரக்குகள் கொள்ளை
குற்றம் சாட்டப்பட்டவர்கள் லாரிகள் மற்றும் வேன்களில் ரயில் பாதைப் பகுதிகளுக்குச் சென்று, ரயில்களில் ஏறியதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. காற்றுக் குழாய்களை துண்டித்து ரயில்களை அவசரமாக நிறுத்தச் செய்த பின்னர், சரக்குகளை வாகனங்களில் ஏற்றி ரகசியக் கிடங்குகளில் பதுக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குழு உரையாடல்களில் பகிரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
21 வயதான நாதன் டேனியல் ஏஞ்சல் தலைமையில், 23 முதல் 38 வயதுக்குட்பட்ட 13 பேர் செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. Southern California train robbery வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சதித்திட்டத்துக்கு 5 ஆண்டுகளும், ஒவ்வொரு திருட்டுக்கும் தலா 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ரயில் போக்குவரத்துக்கு எதிரான வன்முறைப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள் எனக் கருதப்படுவர்.






























