ஹெட்டிபொல பகுதியில் இயங்கி வந்த மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று விற்பனையாளர்களும் விற்பனை நிலையங்களில் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை முறையாக காட்சிப்படுத்தத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் இரண்டு விற்பனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நிர்ணயித்த விலையை விட அதிகமான விலையில் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தத் தவறுவது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அல்லது குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடிய குற்றங்களாக CAA பட்டியலிட்டுள்ளது.
நியாயமற்ற விலை நிர்ணயம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர். 272 விசாரணை அதிகாரிகள் இதற்காக நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.






























