சுவிட்சர்லாந்தின் Beringen பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் தாமாகவே பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெரிய விவாதம் எழுந்துள்ளது.
இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியர் சங்கம் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது குழந்தைகளின் கல்வி சூழலுக்கு ஏற்றதல்ல என்றும் விமர்சித்துள்ளது.
மேலும், இத்தகைய பணிகள் மாணவர்கள் கல்வி நேரத்தை பாதிக்கக்கூடும் என்றும் சுகாதார பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் எழலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்வது போன்ற பொறுப்புகளை வழங்குவது குறித்து சமூகத்தில் கலந்துரையாடல் உருவாகி வருகிறது. சிலர் இது வாழ்க்கைத் திறன்களை கற்றுக்கொடுக்கும் நல்ல முயற்சி என ஆதரிக்க மற்றவர்கள் குழந்தைகளிடம் இப்படியான வேலைகளை எதிர்பார்ப்பது சரியல்ல என கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தற்போது சுவிட்சர்லாந்தில் கல்வி முறை மற்றும் மாணவர் பொறுப்புகள் குறித்து பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது.
பள்ளிகளில் மாணவர்களின் பங்கு எவ்வளவு வரை இருக்க வேண்டும் என்பதைக் குறித்து அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன.






























