சிட்னி விமான நிலையத்தில் 14 கிலோ ஹெரோயின் பறிமுதல்

ஆஸ்திரேலியாவின் Sydney சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 14 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளின் பயணப்பெட்டிகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கண்டறியும் நாய்கள் உதவியுடன் கண்டுபிடித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், “commercial quantity” போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading