இரத்மலானையில் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல், ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (05) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரின் தகவலின்படி குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று வெடித்ததுடன் மற்றொன்று வீட்டுத் தோட்டத்தில் வெடிக்காமல் கிடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படாததுடன் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் […]
