Tag: Gulf Tamil News
குவைத் பொது மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்ததின்படி, நுகர்வோர் டெலிவரி நிறுவனங்களுக்குச் சொந்தமான மோட்டார் ஸ்கூட்டர்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் கடும் கோடைகால வெப்பநிலை காரணமாக டெலிவரி நிறுவன ஸ்கூட்டர்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த முடிவு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அப்போது அமைச்சகம் விளக்கியது. அதிகாரசபை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதிய உத்தரவின் படி ஸ்கூட்டர்கள் காலை 11 மணி […]
வெளிநாட்டில் உள்ள இலங்கைத்தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்குரிய தீர்வு. ஆன்லைன் முறைபாட்டினூடாக அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக இலங்கை அரசிற்கு எடுத்துரைப்பதற்கான வழிமுறையே கீழ்காணும் வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறுகின்றன பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் சார்பில் அவரை சார்ந்தவர்களாலும் இந்த ஆன்லைன் முறைப்பாடுகளை முன்வைக்கமுடியும். கீழ்காணும் இணைப்பினூடாக உங்களுடைய பிரச்சினைக்களுக்குரிய தீர்வுகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இணையவழி முறைப்பாடு / Online Complaint
குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையும் அடங்கும். சமீபத்தில் 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் மாதத்தில் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது […]