குவைத் பொது மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்ததின்படி, நுகர்வோர் டெலிவரி நிறுவனங்களுக்குச் சொந்தமான மோட்டார் ஸ்கூட்டர்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் கடும் கோடைகால வெப்பநிலை காரணமாக டெலிவரி நிறுவன ஸ்கூட்டர்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த முடிவு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அப்போது அமைச்சகம் விளக்கியது.
அதிகாரசபை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதிய உத்தரவின் படி ஸ்கூட்டர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் எனவும் அதேசமயம் ஹைவே மற்றும் ரிங் ரோடுகளில் இயங்குவதற்கு இன்னும் தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.





Leave a Reply