எரிபொருள் செலவைக் குறைத்து பொதுமக்களுக்கு நிதி உதவி அறிவிப்பு – கனடா அரசு

கனடா அரசு நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் புதிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டாட்சி எரிபொருள் வரி (fuel excise tax) தற்காலிகமாக நீக்கப்பட்டு கனடியர்களுக்கு நேரடி பொருளாதார நன்மை வழங்கப்பட உள்ளது.

அரசின் அறிவிப்பின்படி 2026 ஏப்ரல் 20 முதல் 2026 செப்டம்பர் 7 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான முழு கூட்டாட்சி வரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண பெட்ரோல் விலையில் லிட்டருக்கு சுமார் 10 சென்ட் குறைவும் டீசலில் சுமார் 4 சென்ட் குறைவும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை போக்குவரத்து விவசாயம் உணவு விநியோகம் கட்டுமானம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளின் செலவுகளை குறைத்து பொதுமக்களின் அன்றாட செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு “Canada Groceries and Essentials Benefit” எனும் புதிய நலத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இதன் கீழ் தகுதி பெற்ற குடும்பங்களுக்கு ஒருமுறை கூடுதல் GST/HST வரி நிவாரணம் வழங்கப்படும்.

இந்த தொகை ஜூன் 2026ல் வழங்கப்பட உள்ளது மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.

அரசு இந்த நடவடிக்கைகள் மூலம் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் குடும்பங்களின் பொருளாதார சுமை குறைந்து அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading