இது கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளும் மேற்கொண்ட மிகப்பெரிய எல்லை கட்டுப்பாட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த மூன்று ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் அதிகரிக்கப்படவுள்ளன. மனித கடத்தல் குழுக்களை தடுப்பது சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயலும் குடியேற்றவர்களை நிறுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும் ட்ரோன் கண்காணிப்பு ஹெலிகாப்டர் ரோந்து வெப்ப சென்சார் கேமராக்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பிரான்சில் புதிய தடுப்பு மற்றும் கைது மையமும் (detention centre) அமைக்கப்படுகிறது. அங்கு பிடிக்கப்படும் குடியேற்றவர்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களின் நாட்டிற்கோ அல்லது அவர்கள் கடந்து வந்த பாதுகாப்பான நாடுகளுக்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள்.
ஒப்பந்தத்தின் நிதியில் £500 மில்லியன் முன்கூட்டியே வழங்கப்படும் நிலையில் மீதமுள்ள £160 மில்லியன் “விளைவுகளின் அடிப்படையில்” (results-based funding) வழங்கப்படும். அதாவது, குடியேற்றக் கடத்தல் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அந்த தொகை முழுமையாக வழங்கப்படும்.
இங்கிலாந்து அரசு இந்த ஒப்பந்தம் மூலம் ஆங்கிலக் கால்வாய் வழியாக வரும் சட்டவிரோத குடியேற்றத்தை குறைக்க முடியும் என நம்புகிறது. கடந்த ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரக்கணக்கானோர் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் மனித உரிமை அமைப்புகள் இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றன. அவர்கள் கூறுவதாவது இது அடிப்படை பிரச்சினையை தீர்க்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்றும் பாதுகாப்பு தேடி வரும் அகதிகளுக்கு இது கடினமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர்.































