Tag: Tamil Politics
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK, திருகோணமலை மாவட்டத்தின் மூத்த உறுப்பினரும் மொரவாவே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான இராஜமணி அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உப தலைவர் விஜயநாதம் விஜயகுமார் நேரில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மறைந்த இராஜமணி அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக […]
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (03) சென்னை நகரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஈழத்தமிழர் மக்களின் அரசியல் மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஈழத்தமிழர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் […]
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த […]
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய சர்வதேச அரசியல் செயல்முறை ஒன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி” (Tamil Political Framework Initiative) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் வரைவு ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லண்டனில் […]
தமிழக அரசியல் கடந்த பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளால் ஆளப்பட்டு வந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த ஜோசப் விஜய் சந்திரசேகர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது முதல் தேர்தலிலேயே பெரும் முன்னிலைப் பெற்றுள்ளது. இது 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையில் சினிமா உலகம் நேரடியாக அரசியலை கைப்பற்றியதற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை அதே மாதிரியான […]