Tag: United Nations
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி மாநகர சட்டத் திணைக்களத்துடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதன்யாகுவுக்கு எதிராக பிறப்பித்துள்ள பிடியாணையை மேற்கோள்காட்டிய அவர் சட்டம் அனுமதிக்கும் […]
Myanmar News,மியான்மாரில் தொடரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மாயமானதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகளே இந்த பேரிடரில் சிக்கியுள்ளன. முதல் படகில் சுமார் 250 […]
Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]
Asia News,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு புதிய சர்வதேச காலநிலை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டாண்மை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற ஐ.நா. ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக் […]
சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT) பாராட்டியுள்ளதாக வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் […]
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு துறைகள் இணைந்த பரந்துபட்ட மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியம் என வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித்துடன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. தெற்காசிய நாடுகளுக்கிடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள […]
ஐநா NCW சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு (NCW) தலைவருக்கு இடையிலான இந்த சந்திப்பில் பெண்கள் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பின் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேசிய […]
ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு (SPT) 2026 ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை 2017 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் மாதம் SPT தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய தடுப்பு அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.இந்த […]
டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan) நிறைவு நிகழ்வு இன்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே டிட்வா சூறாவளியால் […]