பல மாவட்டங்களில் நடந்த கொலைகளைச் சுட்டிக்காட்டிய உதயநிதி
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என்ற அண்ணன், தம்பி பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பான போட்டியில் அஜித் என்ற இளைஞர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவத்தையும் அவர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி மற்றும் தேனி கூடலூர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார். Tamil Nadu law and order நிலை குறித்து கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் ‘மிக்சர்’ சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
































