நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையம் கடுமையாக சேதமடைந்த பகுதிக்கு அருகில் பிக்அேக்ஸ் மலை அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் உள்ள இந்த இடத்தில், ஆழமாகப் புதைக்கப்பட்ட இரண்டு சுரங்க வளாகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதலின் நேரம் அல்லது அதன் அளவு குறித்து டிரம்ப் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.
மத்திய கிழக்கு தொடர்பான விரிவான திட்டம்
போருக்குப் பின்னர் ஈரானை கட்டுப்படுத்தும் நோக்கில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை உருவாக்கும் விரிவான திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கைகளை விரிவுபடுத்துதல், சவுதி அரேபியா–இஸ்ரேல் உறவு இயல்பாக்கத்தை முன்னெடுத்தல், காசா, சிரியா மற்றும் லெபனான் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இதில் இடம்பெறலாம்.
இதற்கிடையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தற்போது குறிவைக்கப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். ஜோர்டான் வான்பரப்பில் ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர் இந்த விளக்கம் வழங்கப்பட்டது. “இந்த கட்டத்தில், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எங்களுக்கு தெரியவில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். Trump Iran strike threat தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்கா எந்த உறுதியான காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.






























