கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளது. அந்தக் குழுவில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய், 26, விஷால், 23, ஆகியோரும் இருந்தனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிகள் இருவர், பெற்றோர் மீதான கோபத்தில் அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கடற்கரையில் தனியாக இருந்த அவர்களிடம் அஜயும் விஷாலும் பேசியுள்ளனர். பின்னர் அவர்களை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று அறையில் தங்க வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அலறல் சத்தம் கேட்டதால் போலீஸாருக்கு தகவல்
விடுதியில் இரவு நேரத்தில் சிறுமிகள் சத்தமிட்டதை அடுத்து, அருகிலுள்ள அறைகளில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீஸார் சிறுமிகள் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அஜய், விஷால் இருவரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். Velankanni POCSO case தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


































