இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல்
வாலாஜாபேட்டை பாரதி நகரைச் சேர்ந்த 28 வயதான பிரசாந்த் மளிகைக் கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான சுபலட்சுமிக்கு, சுமார் ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பிரசாந்துடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் இருவரும் காதலித்து வந்தனர். பிரசாந்த் அழைத்ததன்பேரில், பெற்றோருக்குத் தெரியாமல் சுபலட்சுமி வாலாஜாபேட்டைக்கு வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுபலட்சுமி விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டதாகவும், பிரசாந்த் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Walajapet couple death குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





























